Friday 18 December 2015

சமமான மன நிலை ஞானமே மதத்தின் வழி-(காஞ்சி மஹா பெரியவர்)

சமமான மன நிலை ஞானமே மதத்தின் வழி-(காஞ்சி மஹா பெரியவர்)

துன்பத்தைப் பற்றி வருந்திக் கொண்டிருப்பது
மதத்தின் வழியாகாது. நாம் சங்கடமான நிலைமையில் இருக்கும் போது தீய எண்ணங்கள்  நம் மனதில் புகாமல் இருக்க பிராத்தனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சமாளிக்கும் திறமை வலுப்பெற்று துன்பமே அர்த்தமற்றதாகிவிடும். அத்தகைய நோக்கு ஞானத்தில் பிறப்பதாகும். ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியாலேயே ஞானத்தை அடைய வேண்டும். ஆகவேதான், நம் மதம் தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டது. நம்மைச் சேர்ந்த, நாம் செய்யும் ஒவ்வொன்றையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்து விட்டால் சுக துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சமமான மன நிலையை நாம் பெறலாம்."
மந்திரமாம் திருநீர் பூசி நம் மனதினிலேயவரை வைக்க
விந்தைகளை அவர் புரிந்திருப்பார் வினைகளை அருத்திருப்பார்
கடலாடி அமுதம் கடைந்து அமரரைக் காத்து நின்ற 
கருவண்ணன் உருவான குருவவரே!
எப்போதும் மலர்ச்சியான உம் முகம் காணத் தவமிருக்கும் மக்கள் கூட்டம்!!
பூவில் நிறைந்த தேனினையே நுகரக் காத்திருக்கும் தேனீக்களைப் போல்
உம் நிறைந்த ஞானத்தையே பருகக் காத்திருக்கும் பக்தர் தம் கூட்டம்!! ..
வேதத்தின் நாயகனாம் மா தவமாம் மா மணியாம்
ஆதவனின் கதிரொளியாம் ஆன்மீக குருவவரே!
சோகங்கள் தீர்த்திடுவார் சுகங்கள் சேர்த்திடுவார்
உலகிலுள்ள உயிரனைத்தும் படைக்கின்ற முதலான
ப்ரஹ்ம ஸ்வரூபமாய் வந்துதித்த குருவவரே!
எங்கெங்கும் பரவும் மகரந்தம் போல் பாரெங்கும் பரவி நிற்குது உம் புகழ்!!
சிவனே என்றழைக்க சிவனென்று சிவமாய் துணை நிற்கும் குருவே!
ஹரனே என்றழைக்க அரணாக காத்து நிற்கும் ஹரியும் நீரே! அருளாளன் நீரே!
பிரமமாய் உம்மை ஏற்று பிரமத்தில் பூஜிக்க பிரம்மமே நீரும் வந்தருள்
குருவாகி திருவாகி குறை தீர்க்கும் அருளாகி குணம் தந்து எம்மை காத்து 
அமைதியை தந்திடும் உம் அதிஷ்டானமே! அருளைப் பொழிந்திடும் தலமே!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!!!