Wednesday 21 October 2015

மனமே புரிந்து கொள் .....

மனமே புரிந்து கொள் .....

எனக்கு ஏற்படும் 
இன்பம் துன்பம் ஆகிய இரண்டு விளைவுகளும் இப்பொமுது செய்கின்ற காரியங்களின் பலன் அல்ல. முந்திய பிறவிகளில் நான் செய்திருக்கும் செயல்களின் பயன்.
உயிரானது
வெளி உலகத்தின் மீது கொண்டுள்ள ஆசைகளை எல்லாம் கடந்து உள்ளத்திற்கு உள்ளே சென்றால் இறைவனின் அருள் கிடைக்கும். எந்த உயிரானது இறைவனைத் தரிசிக்கவில்லையோ அந்த உயிரானது பேரின்பத்தை அடையாது.
மனமே
துன்பத்தை சோதனை என்று ஏற்றுக் கொண்டு விடு உனக்கேன் வேதனை வரப்போகிறது. அந்த சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள். காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.
புரிந்து கொள்
எப்போது நீ போடும் திட்டங்கள் தோல்வி அடைகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள். எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதி அளித்து விட்டான் என்று பொருள்.
வாழ்கையில்
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை. ஏற்றத்தில் மயக்கமும் வீழ்ச்சியில் கலக்கமோ கொள்ளாதே .....
எனக்கு தோல்விகள் குழப்பம்கள் ஏற்படும் பொழுது நான் அடிக்கடி படிக்கும் வசனம்கள் .....
சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவ சிவ சிவ ஓம் ....

ஆதிசங்கரர் உபதேசம்

ஆதிசங்கரர்  உபதேசம்
“சேர்க்கும் பொருள் பறந்து போய்விடும்”
* ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது.
உள்மனதில் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடைய முடியாது.
கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம் தானாகவே விளங்கித் தோன்றும்.
நாம் ஒவ்வொருவரும் மனதை பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
* நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கி பிரகாசிக்கும்.
குருவிடம் உபதேசம், கேள்வி முதலியவற்றைக் கற்றால்,
மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று ஒளியுடன் பிரகாசிக்கும்.
* பகலும், இரவும், மாலையும், காலையும் பருவகாலங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது. வயது கழிகிறது. ஆனால், ஆசை மட்டும் மனிதனை விடுவதில்லை.
* மரணவேளை நெருங்கும் போது இலக்கண சூத்திரங்கள் நமக்கு கைகொடுக்காது.
ஆகையால், கோவிந்தனைக் கூப்பிடு. கோவிந்தனைப் பாடி வழிபடு.
* பொருள் தேடும் வரை சுற்றத்தினர் நம்மை நேசிப்பர்.
நோயினால் உடல் தளர்ந்த பின் யாரும் நம்மை கண்டுகொள்ளமாட்டார்கள்.
எனவே, பொருள் சேர்ப்பதில் உள்ள ஆசையை விட்டு நல்ல எண்ணங்களை மனத்தில் சிந்தனை செய்வது நல்லது. நம்முடைய நிலைக்கேற்ப பணி செய்து, கிடைக்கின்ற பொருளில் மகிழ்ச்சியாக வாழ்தலே அறிவுடை மையாகும்.
* பொருள், சுற்றம், இளமை முதலியவற்றில் கர்வம் கொள்ளக்கூடாது.
காலம் ஒரு கணத்தில் எல்லாவற்றையும் கொண்டு சென்று விடும்.
அதனால், மறைகின்ற அனைத்தையும் விட்டு இறைவனின் மீது சிந்தனையை செலுத்துங்கள்.
* எதிரி, நண்பன், மகன், உறவினன் என்று பிரித்துப் பார்க்காமல், யாரிடத்தும் நட்பும் பகையும் கொள்ளாமல் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்.
* பகவத்கீதையை சிறிதாவது படிப்பவன், கங்கைநீரை துளியாவது பருகியவன், இறைநாமத்தை உள்ளன்போடு ஒருமுறையாவது சொல்பவன் ஆகியோருக்கு உறுதியாக எமபயம் இல்லை.
-ஆதிசங்கரர்

ஜபம் செய்யும் திசையும் பலனும்

ஜபம் செய்யும் திசையும் பலனும் (ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு மஹா ஸ்வாமிகள்)






கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்

தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை
தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வருமை
மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்
ஜபம் செய்யும் இடமும் பலனும் .....
வீடு- பத்து மடங்கு பலன் பலன்
கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்
குளம்- ஆயிரம் மடங்கு பலன்
ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்
மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்
சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்
சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்