Sunday 2 August 2015

கைகளால் காட்டும் முத்திரையின் நோக்கம் என்ன?

தெய்வங்கள் கைகளால் காட்டும் முத்திரையின் நோக்கம் என்ன?


ஒவ்வொரு முத்திரைக்கும் ஒரு பெயருண்டு. 
      அபய முத்திரை என்பது, இறைவன் அல்லது இறைவியின் வலது கை விரல்கள் மேல் நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் நிலையிலும் இருப்பது. இந்த முத்திரைதான் எதிரில் நின்று தன்னை வணங்கும் பக்தர்களுக்கு `யாமிருக்க பயம் ஏன்? உன்னை காப்பாற்றுவேன்’ என உணர்த்துவதாக உள்ளது.
      வரத முத்திரை என்பது, இறைவன் அல்லது இறைவியின் இடது கை உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களின் பக்கமும், விரல்கள் திருவடிகளை சுட்டிகாட்டிய நிலையிலும் இருக்கும். இது இறைவன், என் திருவடிகளை பற்றினால் அனைத்து நன்மைகளையும் பெறலாம், முக்தி பெறுவீர்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது. உன் விருப்பத்தைக் கேள் வரம் தருகிறேன் என்பதையும் குறிக்கிறது. 
      தட்சிணாமூர்த்தி காட்டும் ஞானமுத்திரை என்பது கட்டை விரலின் அடியில் ஆள்காட்டி விரலை வைத்து, மற்ற மூன்று விரல்களையும் மேல்நோக்கியவாறு இருப்பதாகும். இதில் கட்டை விரல் இறைவன். ஆள்காட்டி விரல் மனிதன். மற்ற மூன்று விரல்களும் உலக வாழ்வின் ஆசாபாசம், இன்பம், துன்பத்தை குறிக்கும். இன்ப துன்பத்தைப் பொருட்படுத்தாமல் அதிலிருந்து விலகி மனிதன் கடவுளைச் சரணடைந்தால் பேரின்பம் உண்டாகும் என்பதே இதன் தத்துவம். இப்படி ஒவ்வொரு முத்திரைக்கும் தனித்தனி தத்துவங்கள் இருக்கின்றன.
"இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்...

No comments:

Post a Comment